தமிழர்களே, இப்போது பெய்வது
வெப்பசலனத்தால் வந்த மழை. (இன்று வந்த தகவல்படி பருவமழை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சொல்கிறார்கள்..)
இந்த முறை தென்மேற்கு பருவமழை
சராசரியைவிட குறைவாகப்
பெய்யுமென நிபுணர்கள்
எச்சரிக்கிறார்கள்.
இப்போது பெய்யும் மழை நல்ல ஒரு
தொடக்கம். பருவமழைக் குறைவை
ஈடுகட்டும்.
எனவே மழைநீரை வீணாக்காதீர்கள்.
மழைநீரை சேகரியுங்கள்.
இந்த மழையை பயன்படுத்தி
வீட்டில், சாலையில், தோட்டத்தில்,
பள்ளியில், அலுவலகத்தில் வாய்ப்புள்ள
இடங்களில் ஆளுக்கு ஒரு
மரக்கன்றுகளை நடுங்கள்.
கூகுள் மேப்பில் தமிழ்நாட்டைப்
பாருங்கள். மொட்டையடிக்கப்பட்டு
தீபிடித்த காடாக இருப்பதை காணலாம்.
தமிழ்நாட்டை பசுமை பூமியாக்குவோம்
உங்கள் வீட்டில் பெய்யும் மழை
உங்களுக்குத்தான் சொந்தம்.
வீட்டில் பெய்யும் மழையை நிலத்தில்
இறக்குங்கள்.
இயற்கையாகவே பூகோளப்படி
மழைமறைவு பிரதேசமான தமிழ்நாட்டில்
நிலத்தடி நீரை அதிகப்பபடுத்துங்கள்.
உங்கள் தெருவில், ஊரில் உள்ள
நீர்நிலைகளை பாதுகாத்திடுங்கள்
அதை தூர் வாருங்கள்.
பள்ளி மாணவர்கள்+விவசாயிகள்+
இளைஞர்கள்+முதியவர்கள் இணைந்தால் இது சாத்தியப்படும்.
பயனுள்ள மரங்களை நடுங்கள்
முருங்கை, மா, தென்னை, வாழை, வேம்பு,
ஆல், அரசு, பனை போன்ற மரங்களை நடலாம்.
வீட்டில் வீணாகும் நீரில் கீரை, தக்காளி
பச்சை மிளகாய் நடலாம்.
வீட்டின் முன்னாடி தண்ணீர்பானை
வையுங்கள். மக்களுக்கு குடிநீர் சேவை
அளியுங்கள். தண்ணீர் விற்பனைச் சரக்காவதை தடுப்போம்.
அலங்காரச் செடிகள், பூச்செடிகளை
வளர்க்காதீர்கள்.
அப்பன், தாத்தன் சொத்து மட்டுமல்ல நமது சொத்து இந்த மண், இந்த இயற்கை, இந்த மரம், இந்தச்செடி, இந்த நீர்நிலைகள், இந்த ஆறு எல்லாம் நம் சொத்துதான்
அதை பாதுகாப்போம். பத்திரமாக அடுத்த
தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்.
ஆறுகள் இல்லாத வளைகுடா நாடுகளில்
தண்ணீர் பஞ்சமில்லை.
மின் வெட்டு இல்லை.
நூற்றுக்கணக்கான கிளை நதிகளும்
20க்கும் மேற்பட்ட பெரிய நதிகளும்
ஆண்டுக்கு 80% தேவைக்கு பெய்யும்
மழையும் இருந்தும் தண்ணீருக்கு
தெருத்தெருவாக ஓடினால்
பாதி நம் குற்றம்தான். மீதி தான் அரசு.
தனிமனிதனாக இருந்து சமூகத்தை
பார்க்காதே.
சமூகத்திலிருந்து தனிமனிதனை பார்.
மனிதன் இல்லையென்றாலும்
மரம் இருக்கும்.
மரமில்லையென்றால் மனிதன்
இருக்க முடியாது.
நன்மையைத் தவிர வேறொன்றும்
செய்யத் தெரியாத மரத்தை நேசியுங்கள்.
மரத்தைப் போற்றுங்கள்.